நாகர்கோவில் ஜூலை 14
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து மெட்ரைட் ஹெல்த்கேர் செலியூஷன் நிறுவனத்தின் பனிரெண்டாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
இந்நிறுவனமானது அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ பில்லிங் நிறுவனமாகும் இது நாகர்கோயில் மற்றும் திருநெல்வேலியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது பனிரெண்டாம் ஆண்டு நிறைவு விழாவை மிக சிறப்பாக கொண்டாடியது . இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டார் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மெட்ரைட் நிறுவனர் டாக்டர் சுஜின் ஜெகாஷ் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் நிறுவனத் தலைவர் டாக்டர் சுஜின் ஜெகாஷ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
தென்மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத இந்த காலகட்டத்தில் சாப்ட்வேர் துறைகளில் மருத்துவ துறை சார்ந்து பணியாற்ற வேண்டும். கொரோனா காலகட்டத்தில் மருத்துவதுறையில் வேலை வாய்ப்பின்மை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது. மேலும் இந்த துறையை ஒழுங்குபடுத்த தென் மாவட்டங்களில் தொழிற் பூங்கா மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கொண்டு வர வேண்டும். மேலும் அரசு திறன்வளர்ச்சியை அதிகரிக்க எங்களை போன்ற தனியார் ஐடி நிறுவனங்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். அப்பொழுது படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள்.பாலா, குரேசி ,மைனா நந்தினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



