சுசீந்திரம்.மே 30
சுசீந்திரம் அருகே உள்ள மாங்குளம் ஊரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சேத்திரப் பிள்ளை 80 அவரது மனைவி மகராசி ஆகிய வயதான தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர் நேற்று இரவு பெய்த பலத்த காற்று மற்றும் மழையினால் வீட்டின் பின்பு இருந்த தென்னந்தோப்பில் இருந்து தென்னை மரம் இவர்களது ஓட்டு வீட்டில் விழுந்து உள்ளது நல்வாய்ப்பாக இவர்கள் படுத்திருந்த இடத்தின் அருகே மரம் முறிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் பிழைத்தனர் இதனால் அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை எனவே பாதிக்கப்பட்ட முதியவர் வீட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு மரத்தை அப்புறப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் அது போல மரம் நிறைந்த பகுதிகளில் வீடுகளில் இருக்கும் மக்கள் இரவு நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும் மழைக்காலம் என்பதால் மின்சாரம் அடிக்கடி தடைப்படும் என்பதை கருத்தில் கொண்டு குடிநீரையும் இரவு நேரத்தில் போதிய வெளிச்சத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் மழை மழை காலம் என்பதால் வயதான தம்பதியினர் குழந்தைகள் தாழ்வான பகுதிகளில் இருந்தால் அவர்களை பாதுகாப்பான இடத்தில் சேர்க்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்
படுத்திருந்த இடத்தின் அருகே மரம் முறிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் பிழைத்தனர்



