மதுரை ஜூன் 18,
மதுரையில் முத்தங்கி அலங்காரத்தில் முருகப் பெருமான் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஊஞ்சல் திருவிழா ஐந்தாம் நாளன்று முருகன் தெய்வயானை முத்தங்கி அலங்காரத்தில் ஊஞ்சலில் காட்சி அளித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை அரோகரா அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.