மதுரை டிசம்பர் 8,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் காசநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைவோம் என்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்று பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். துணை இயக்குநர் (காசநோய்) மரு.இராசசேகரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.செல்வராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.குமரகுருபரன், துணை இயக்குநர்(குடும்பநலம்) மரு.நடராஜன், தொழுநோய் துணை இயக்குநர் மரு.விஜயன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (காசநோய்) லட்சுமி பாரதி, அஜித் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் உள்ளனர்.