அரியலூர்,ஜூலை 10:
புதிய குற்றறவியல் சட்டங்களை எதிர்த்து அரியலூர் ஜி.எஸ்.டி அலுவலத்தை புதன்கிழமை நேற்று வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய குற்றறவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 1 முதல் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து அரியலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி புதன்கிழமை ஜி.எஸ்.டி அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
போராட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கதிரவன், செயலர் முத்துக்குமரன், பொருளாளர் கொளஞ்சியப்பன் ஆகியோர் முன்னிலையில் வழக்கறிஞர் செல்ல.சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
அரியலூர் மாவட்ட செயதியாளர் வினோத்குமார்.