தருமபுரி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் பழனி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர கழகச் செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்புரையாற்றினார்.
இராஜாமனி மாநில விவசாய அணி துணைச் செயலாளர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் காந்தி, முனுசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிவேந்தன் கழகத் தீர்மானக் குழுச் செயலாளர், சசிகுமார் மாநில மாணவரனி செயலாளர், நெல்லிக் குப்பம் சங்கர் தலைமைகழக பேச்சாளர்,இராமதாஸ் மாவட்ட கழகச் செயலாளர், குணசேகரன் மாவட்ட கழக அவைத் தலைவர், கிருபானந்தம் மாவட்ட கழக பொருளாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சங்கர் நன்றி உரையாற்றினார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழக பொறுப்பாளர்கள், கழக செயல்வீரர்கள் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.