தஞ்சாவூர் ஏப்.7.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் தமிழக அரசு உயர் கல்வி துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் 1358 பேருக்கு பட்டம் வழங்கினார்
அப்போது அவர் பேசிதாவது:
பெண்கல்வியின் உயர்விற்கு முக்கியப் பங்குவகிக்கும் கல்லூரி.இக்கல்லுரி அடுத்த ஆண்டு தனது 60-வது ஆண்டு கல்விப்பணியை எட்டவுள்ளது. இக்கல்லூரியில் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த மாணவிகள் மட்டுமல்லாது பிற மாவட்டத்தைச் சார்ந்த மாணவிகளும் விரும்பி வந்து கல்வி கற்கும் சிறந்த கல்லூரியாக விளங்குகின்றது. கல்லூரியில் இளங்கலையில் 14 பாடப்பிரிவுகளும், முதுகலையில் 13 பாடப்பிரிவுகளும், ஆராய்ச்சி பிரிவில் 09 பாடப்பிரிவுகளும் உள்ளன. இவ்வாண்டு தேசிய தரமதிபீட்டுக்குழுவினரால் தனது ஐந்தாவது சுழற்சியில் ‘ஏ’ தகுதி நிலையைப் பெற்றுள்ளது. சிறப்புமிகு இக்கல்லூரியின் 40 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடை பெற்றது
கல்லூரி முதல்வரும் பேராசிரியர்முனைவர் அ. ஜான் பீட்டர் வரவேற்புரையாற்றினார்.
மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பேராசிரியர் முனைவர் து.ரோசி,தேர்வு நெறியாளர் முனைவர் தெ.மலர்விழி
பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் முனைவர் பு. இந்திராகாந்தி,தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சீ.வைஜெயந்
திமாலா,ஆங்கிலத்துறைத்தலைவர் முனைவர் இரா.ரமாபிரியா
வரலாற்றுத்துறைத்தலைவர் முனைவர் அ.கார்குழலி,
பொருளியல் துறைப்பேராசிரியர் முனைவர் க.சுசிலா, வணிகவி
யல் துறைத்தலைவர் முனைவர் ப.முத்தமிழ் திருமகள்,வணிக
நிர்வாகவியல் துறைத்தலைவர் முனைவர் மா. லட்சுமி பாலா
கணிதத்துறைதலைவர் முனைவர் சு.இந்திரகலாகணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் வே.கயல்விழி,இயற்பியல் துறைத்தலைவர் கோ அனுராதா,
வேதியியல் துறை தலைவர் முனைவர் மா.வெள்ளைச்சாமி,
தாவரவியல் துறைத்தலைவர் முனைவர் கோ சாந்தி,
விலங்கியல் துறைத்தலைவர் முனைவர் ந.சந்திரகலா,
புள்ளியியல் துறைத்தலைவர் முனைவர் ம.அனுசுயா,
புவியியல் துறைத்தலைவர் முனைவர் க.பானுகுமார்,
நூலகர் முனைவர் இர.சங்கரலிங்கம்,
உடற்கல்வித்துறை இயக்குநர் செ.தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத் தரம் பெற்ற 11 இளங்கலை மாணவிகளுக்கும், 09 முதுகலை மாணவிகளுக்கும் பதக்கங்கள் வழங்கியும்,1097 இளங்கலை மாணவிகளுக்கும், 261 முதுகலை மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கி வாழ்த்துரையாற்றினார்.
விழா ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர்,பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் முன்னாள் மாணவிகள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
குந்தவை நாச்சியார் கல்லூரி பட்டமளிப்புவிழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics