நாகர்கோவில் நவ 9
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் வசித்து வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கருக்குழாய்க்கு வெளியே கருமுட்டை வளர்ந்தது.
அறுவை சிகிச்சைக்கு மறுத்த அந்த இளம் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை கலெக்டர் அழகு மீனா நேரடியாக சந்தித்து பேசினார்.
கலெக்டரின் நடவடிக்கையால் தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த இளம் பெண் நலமுடன் உள்ளார் .
மாவட்ட கலெக்டரே நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று அந்தப் பெண் மற்றும் உறவுகளுடன் பேசி அறுவை சிகிச்சைக்கு சம்மதம் வாங்கிய செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.



