சுசீந்திரம், ஏப் 30
கன்னியாகுமரி மகாதானபுரம் அருள்மிகு கிருஷ்ணசாமி திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்பு 2023-24 ம் ஆண்டின் படி திருக்கோயில் நிதியின் மூலம் திருப்பணி வேலைகள் ரூ.19 லட்சம் செலவில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கும்பாபிஷேக திருப்பணிகளில் பாலாலய பூஜைகள், இன்று காலை 7.30 மணி அளவில் நடந்தது. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் வகித்தார். இணை ஆணையர் பழனிக்குமார் முன்னிலை வகித்தார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மேலாளர் ஆனந்த், இணை ஆணையர் நேர்முக உதவியாளர் வெங்கடேஷ், ஸ்ரீ காரியம் ராமச்சந்திரன், திமுகமாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துணை அமைப்பாளர் சுந்தரம் , ஒன்றிய துணைச் செயலாளர் பிரேமலதா, மகாதனாபுரம் கிராமம் நிர்வாககுழு உறுப்பினர்கள் ரவி, ஸ்ரீனிவாசன் போற்றி, ஸ்ரீராம், சங்கரகோமதி, ஷோபா, தமிழக ஊராட்சி செயலர் சங்க மாவட்டதலைவர் காளியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். பூஜை ஏற்பாடுகளை கோயில் தந்திரி சுஜீத் குழுவினர் செய்திருந்தனர்.