ராஜா எம்எல்ஏ கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை
சபரிமலை சீசனை முன்னிட்டு கொல்லம் – செகந்திராபாத், சபரிமலை சிறப்பு இரயில் இயக்கப்பட்ட நிலையில் இந்த ரயில் சங்கரன்கோவிலுக்கு ரயில் நிறுத்தம் வழங்காததால் நிற்காமல் சென்று வந்தது. இது குறித்து சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வியாபாரிகள் உள்ளிட்ட பல தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர் .அதனைத் தொடர்ந்து சென்னையில் தெற்கு ரயில்வே துணைப் பொது மேலாளர் விவேக் சர்மாவை கடந்த டிசம்பர் 12ஆம் தேதி சந்தித்து சங்கரன்கோவில் ரயில் நிறுத்தத்தில் இந்த சிறப்பு ரயில் நிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். ராஜா எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று நேற்று ரயில்வே நிர்வாகம் செகந்திராபாத் முதல் கொல்லம் வரை செல்லும் சிறப்பு ரயில் ச.ங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியிட்டது. ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.