தேனி.
தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சி வடக்கு தெரு மயான சாலை பகுதியில் இருக்கும் ஓடையில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு பெயர் அறிய நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளதால் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.