மார்த்தாண்டம், நவ- 8
குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இந்த சிறுமியின் பெற்றோர் பிரிந்து சென்று விட்டனர். சிறுமி தக்கலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்து அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி மாலை மாணவி விடுதியில் அவரை பார்ப்பதற்கு ஒரு பெண் வந்து, சித்தி என்று கூறி அங்கிருந்து அழைத்து சென்றார். அதன் பிறகு தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்த பிறகு கடந்த நான்காம் தேதி விடுதிக்கு மாணவி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகத்தினர் விசாரித்த போது மாணவி அழைத்து சென்றது அவர் சித்தி இல்லை என்பதை கண்டுபிடித்தனர்.
இதை அடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது, அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் ஐடிஐ படித்துள்ள ராகுல் என்பவர் அந்த மாணவியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. ராகுலின் அக்கா சந்தியா (28)என்பவரும் தம்பியின் காதலுக்கு ஆதரவு தெரிவித்து தீபாவளி பண்டிகை விடுமுறையில் சித்தியென நிர்வாகத்திடம் பொய் கூறி மாணவியை அழைத்து சென்றது தெரிய வந்தது.
அங்கு அழைத்து சென்ற பின் ராகுல் அந்த மாணவிகள் ஆசை வார்த்தை கூறி 5 நாட்கள் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. நேற்று போலீசார் அதிரடியாக மீட்டனர். மேலும் ராகுல் போச்சோவில் வழக்கு பதிவு செய்து, அவரது சகோதரி சந்தியாவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.