தஞ்சாவூர் ஜூலை 30.
தஞ்சாவூர் அருகே மேலபுனவாசல் கொள்ளிடக்கரையில் இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை, உலகளாவிய ஆசீவகத்தமிழ் சித்தர் வழிபாட்டு மையம் மற்றும் சித்த வித்தை ஞானபீடம் சார்பில் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரியில் புனித நீர் ஊற்றி மலர் தூவி தீபாரதனை செய்து காவிரி யை வரவேற்று இயற்கை வழிபாடு நடந்தது.
ஆசீவகத்தமிழ் சித்தர் கண்ணன் அடிகளார் தலைமையில், சித்தர் மையங்களின் உலகளாவிய தலைவர் கோவை சரவணன், அகில இந்திய தலைவர் சங்கீதா, தமிழக தலைவர் தஞ்சாவூர் செழியன், திருவையாறு நடராஜ கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் காவிரியை வரவேற்று, விவசாயம் செழிக்க வேண்டும் நாடு செழிக்க வேண்டும் என்று கோ பூஜை, நதி பூஜை, மர பூஜை, கதிரவன் பூஜை, நாக (புற்று) பூஜை சித்தர் பூஜைகள் செய்யப் பட்டது.
பின்னர் காவிரிக்கு பொரி, பூ தூவி, பால் தெளித்து, புனித நீர் ஊற்றி தீபாரதனை காண்பிக்கப் பட்டது .ஆற்றில் பாலிதீன் பைகள், குப்பைகள், கழிவுகள், பழைய துணிகளை போடாமல் காவிரி பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை மற்றும் மேல புனவாசல கிராம மக்கள் செய்திரு ந்தனர்.