பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மரியா நிவாஸ் பள்ளி மற்றும் பிரம்மா அகடாமி சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான கராத்தே, சிலம்பம், யோகா போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் கராத்தே சிலம்பம் யோகா என மூன்று கலைகளும் ஒரே மேடையில் நடைபெற்றது.
பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்கள் திறமைகள் வெளிக்கொணரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கராத்தே, சிலம்பம், யோகா போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் நான்கு பேருக்கு பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களை சங்கர் நகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கவுதமி வழங்கி மாணவர்களை பாராட்டினார்.
இதற்கான போட்டிகளுக்கான ஏற்பாடு களை மரியநிவாஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் சேர்மன் ஜெ.ரங்கநாதன், தாளாளர் ஆர். பத்மினி மற்றும் கே.ஆர்.ராகவேந்திரன், முதல்வர் விஜயகுமாரி, துணை முதல்வர் தனசேகரன் பிரம்மா அகடாமி நிறுவனர் வித்யலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் மாணவர்களின் தனி திறமைகளை வெளிகொண்டு வரும் வகையில் இந்த போட்டிகள் நடைபெற்றதாகவும், அடுத்த ஆண்டு தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்படும் எனவும் போட்டியின் ஏற்பாட்டாளரும், பிரம்மா அகடாமி நிறுவனருமான வித்யலட்சுமி தெருவித்தார்.
இதில் காரத்தே மாஸ்டர் பன்னீர்செல்வம், யோகா மாஸ்டர் சசிகலா மற்றும் மரியநிவாஸ் பள்ளி ஆசிரியர்கள், கராத்தே மாஸ்டர்கள் மற்றும் மாணவ, மாணவியர், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்