புதுக்கடை, ஜன. 14 –
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பொங்கல் நாளை முன்னிட்டு சமத்துவ கோலப் போட்டிகள் பறம்பு என்ற பகுதியில் உள்ள சமூக நல கூடத்தில் நடைபெற்றது. கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார்.
இந்த போட்டியில் 8 குழுக்களாக 40 பெண்களும் 15 மாணவிகளும் கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் குறித்த கோலங்கள் சிறப்பாக வரைந்தனர். வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் பாலூர் தேவா, ஒன்றிய பொருளாளர் தங்கத்துரை, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பெஜான் சிங், இளைஞரணி அமைப்பாளர் அனுலால்டாம், மகளிர் அணி அமைப்பாளர் கிரிஸ்டல் பபி, மாணவரணி துணை அமைப்பாளர் ஜனோபர்ட் மற்றும் விவசாய தொழிலாளர்களின் துணை அமைப்பாளர் லாசர், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அபிஷன், ஜேக்கப் ததேஸ், வார்டு உறுப்பினர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



