நாகர்கோவில், ஜன. 12 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர் கூறும் போது: திமுக அண்ணா வழியில் செயல்படுவதாம் வழக்கம். ஒரு ஆதிக்கத்தை கட்டுப்படுத்த நினைக்கும் ஒன்றிய பாஜக அரசை திமுக அரசு எதிர்த்து வருகிறது. திமுக அரசு இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்து வருகிறோம். தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு இதுவரை தரவில்லை.
தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் இந்த பாஜக அரசுடன் இந்த மாநில கட்சிகள் கூட்டணி வைத்துவிட்டு அவர்கள் ஆடுகின்ற ஆட்டத்திற்கு தலையாட்டுகின்ற கட்சியாக அதிமுக கட்சி இருந்து வருகிறது. மேலும் அவங்க கட்சியில் உள்ள உள்கட்சி பூசலை தீர்க்க டெல்லியில் சென்று அமித்ஷாவுடன் முழங்காடுகிறார்கள். இந்தி திணிப்பு பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லாத கட்சி அதிமுக கட்சி திமுக பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு அருகதை கிடையாது.
இந்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இந்த முறையும் அவர் வெறும் கையோடு தான் வருவார். தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தரக்கூடாது என்று ஒரு முடிவோடு தான் இருக்கிறார் என தெரிவித்தார்.



