கன்னியாகுமரி செப் 16
சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் அந்தவகையில் ஒண பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகாலை முதலே முக்கடல் சங்கமதில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரை முழுவதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது சூரிய உதய காட்சிகளை கண்டும், கடலில் குளித்து நீராடி செல்ஃபி எடுத்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக காணப்பட்டனர். சுற்றுலா பயணிகள் சுற்றுலா படகுகளில் செல்வதற்கு ஆர்வம் காட்டினர் சுற்றுலா பயணிகளின் வருகையால் கன்னியாகுமரி களைகட்டி உள்ளது.