குளச்சல், நவ. 12 –
குளச்சல் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் உள்ளார். கடல் தொழில் என்பதால் கணவர் மீன்பிடிக்க சென்ற சமயத்தில் மனைவி வேறொரு வாலிபருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இது தொடர்பான தகவல் தெரிய வந்ததும் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் இந்த பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ரெண்டு பேரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
பின்னர் இரண்டு பேரும் தனித்தனியாக உறங்க சென்றனர். மகள் மீனவருடன் படுத்து இருந்தார். இந்த நிலையில் திடீரென ஏதோ சத்தம் கேட்டு கணவர் கண்விழித்தார். மனைவி கோபத்துடன் சென்று தனியறையில் தூங்கியதால் ஏதாவது விபரீத முடிவு எடுத்து விடக்கூடாது என அச்சத்தில் அவர் மனைவி படுத்திருந்த அறை கதவை திறந்து பார்த்தார். அப்போது கணவர் வீட்டில் இருக்கும்போது கள்ளக்காதலனை வரவழைத்து அவருடன் மனைவி உல்லாசமாக இருந்து கொண்டிருந்தார்.
இந்த காட்சியை கண்ட மீனவர் ஆத்திரத்தில் கதவை திறந்து கொண்டு இரண்டு பேரையும் சரமாரியாக தாக்கினார். ஆனால் இரண்டு பேரும் சேர்ந்து மீனவரை திருப்பி தாக்கினார்கள். இதனால் கோபத்தில் அவர் வீட்டில் இருந்த பிளேடு எடுத்து மனைவியின் கள்ளக்காதலன் கழுத்தை அறுத்தார். இதை பார்த்ததும் அரை நிர்வாண நிலையில் மனைவி இருந்த மனைவி அவசரமாக வெளியே ஓடினார். இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் வந்து கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த நபரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக குளச்சல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


