நாகர்கோவில், நவம்பர் 15 –
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் கனடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு இவரது நண்பர் மூலம் வெளிநாட்டில் மூலப்பொருட்கள் வாங்குவதற்கு சுமார் 60 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்ததாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்கள். உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு, ஆய்வாளர் தசண்முக வடிவு தலைமையிலான போலீசார் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ராஜீவ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிபு ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
சதீஷ் இவர்கள் கொடுத்த வங்கி கணக்குகளின் ஆன்லைன் மூலம் 57 லட்சம் செலுத்தி உள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு நெதர்லாந்து கம்பெனிக்கு அனுப்பவில்லை. இதுபோன்று மேலும் சிலரிடம் மோசடி செய்திருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



