களியக்காவிளை, டிச. 5 –
கன்னியாகுமரி மாவட்ட அளவிலான பஜனை போட்டிகள் வெட்டுவெந்நி, பன விளை இசக்கி அம்மன் கோயிலில் வைத்து நடந்தது. இந்த பஜனை போட்டியில் படந்தாலுமூடு அருகே போற்றி விளை, இட்டியாரக்குளம் பௌர்ணமி பஜனை குழுவினர், பனவிளை இசக்கி அம்மன் கோயில் பஜனை குழுவினர், பாலப்பள்ளம் பஜனை குழுவினர், கல்வெட்டான் குழி கோயில், தக்கலை கிருஷ்ணன் கோயில் பஜனை குழுவினர் உட்பட 14 பஜனை குழுவினர் பஜனை போட்டியில் பங்கேற்றனர்.
இந்த பஜனை போட்டியில் இட்டியாறக்குளம் பெளர்ணமி பஜன்ஸ் பஜனை குழுவினருக்கு முதல் பரிசு கிடைத்தது. பஜனை போட்டியில் முதல் பரிசு பெற்ற பஜனை குழுவினரை இட்டியாரக் குளம் நாகரம்மன் வன துர்க்கா பகவதி அம்மன் கோயில் நிர்வாக கமிட்டியினர் பாராட்டினர்.



