மார்த்தாண்டம், நவ. 18 –
மத்திய பாஜ அரசு மற்றும் மத்திய தேர்தல் ஆணயத்தையும் கண்டித்து குழித்துறை கழுவந்திட்டையில் காங். சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மத்திய தேர்தல் ஆணையம், மத்திய பாஜ அரசின் உதவியுடன் வாக்கு சேர்த்தல் மற்றும் வாக்கு நீக்கல் ஆகியவற்றில் முறைகேடுகளை செய்து தேர்தலில் வெற்றி பெற்று வருவதாவும், எஸ்.ஐ.ஆர் மூலம் நாடு முழுவதும் வாக்கு மோசடியில் ஈடுபட்டு மக்களை ஏமற்றி வருவதாகவும் கூறி இந்திய முழுவதும் காங். தலைவர் ராகுல் காந்தி உத்தரவின் பேரில் பல்வேறு கட்ட போராட்டங்களை காங். நடத்திவருகிறது.
மேல்புறம் வட்டார ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கேதன் சார்பாக குழித்துறையை அடுத்த கழுவன் திட்டையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மேல்புறம் வட்டார ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கேதன் தலைவர் பிபின் தங்ககுமார் தலைமை தாங்கினார்.
ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கேதன் அமைப்பின் மேற்கு மாவட்ட தலைவர்
ஜிஜி முன்னிலை வகித்தார். போராட்டத்தை விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.
மேல்புறம் வட்டார காங். கமிட்டி தலைவர் ரவிசங்கர், களியக்காவிளை டவுன் பஞ். தலைவர் சுரேஷ், ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கேதன் மேற்கு மாவட்ட தலைவர் அஜிகுமார், காங். மாநில பொதுசெயலாளர்கள் ஜார்ஜ் ராபின்சன், ஆஸ்கார் பிரடி, ரமேஷ்குமார், பால்ராஜ், மாநில துணைத்தலைவர் டாக்டர். சாமுவேல் ஜார்ஜ், அகில இந்திய பொதுகுழு உறுப்பினர் ரெத்தினகுமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஷாஜன் கிறிஸ்டல், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் டோன் பெரின் உள்ளிட்ட ஏரளமானோர் கலந்து கொண்டு பேசினர். போராட்டத்தை குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர். பினுலால் சிங் சிறப்புரையாற்றி போராட்டத்தை முடித்து வைத்தார்.



