சுசீந்திரம், டிச. 20 –
சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை மது சூதன புரத்தைச் சார்ந்தவர் தங்க ராஜா (65). இவர் அப்பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று இவர் பறக்கையிலிருந்து தெங்கம்புதூர் செல்லும் பாதையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது மதுசூதனபுரம் பஸ் ஸ்டாப் அருகில் நிற்கும் போது அதே திசையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்க ராஜா தலையில் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவரது மருமகன் பிரவீன்சுஜில் (43) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அவர் வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறியுள்ளனர். இது குறித்து பிரவின்சுஜில் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


