மார்த்தாண்டம், டிச. 10 –
குமரி மாவட்ட ஏஐடியுசி யின் சார்பாக மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு கட்டிட தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை உயர்த்திட வலியுறுத்தியும், குமரி மாவட்டத்தில் பி. எப்பை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியத்தை உடனே வழங்கிட வலியுறுத்தியும், தொழிலாளிகளின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் நலவாரியமே ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்க்கு குமரிமாவட்ட ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சுரேஷ் மேசியதாஸ் தலைமை தாங்கினார். ஆர். செல்வராணி, றி. ரோஸ்மேரி, வி. அருள்குமார், பி. கனி, சி. விஜயன், ஜி. விஜய்ஸ்டாலின், எஸ். நாராயண பெருமாள், மஞ்சாலுமூடு மரியதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.துரைராஜ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
ஏ ஐடியுசி மாவட்டதலைவர் எஸ். அனில்குமார், மாவட்டக்குழு எஸ்.கல்யாண சுந்தரம், முன்னாள் மாவட்ட செயலாளர் தக்கலை எஸ்.ராஜூ ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் தா. சுபாஷ் சந்திர போஸ் ஆர்ப்பாட்ட போராட்டத்தை நிறைவு செய்தார்.



