கன்னியாகுமரி, ஜன. 3 –
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகன் ராஜேஷ் (25). இவரும் இவரது நண்பரான வினோத் என்பவருமாக கன்னியாகுமரி – விவேகானந்தபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு எதிரே வந்த கலைஞர் குடியிருப்பு வடக்கு தெருவை சேர்ந்த சேர்ந்த இன்பராஜ் மகன் உதயராஜ் என்பவர் ஓட்டி வந்த கார் வேகமாக மோதியது. இதில் ராஜேஷ் மற்றும் வினோத் பலத்த காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் ஒடிசாவை சேர்ந்த முலாம் சிங் என்பவரை இடித்து தள்ளி விட்டு, இவர்களை வந்து இடித்து விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது. படுகாயம் அடைந்த ராஜேஷ், வினோத் கன்னியாகுமரி அரசு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். படுகாயம் அடைந்த ஒடிசாவை சேர்ந்த முலாம் சிங் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


