நாகர்கோவில், டிச. 22 –
கோட்டார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வல்லன்குமரன் விளை பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த குடிநீர் தொட்டி மீது நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் 16 வயது மதிக்கத்தக்க பிளஸ் 2 மாணவி ஏறினார். இருட்டாக இருந்ததால் இதை முதலில் யாரும் கவனிக்கவில்லை. மாணவி தொட்டி மீது ஏறி நின்று நான் சாகப் போறேன் என கூறிய பின்னரே அந்த பகுதி பொதுமக்கள் கவனித்தனர்.
உடனடியாக இது குறித்து கோட்டாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்ததும் கோட்டார் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர் அடிக்கடி தகராறு செய்கிறார்கள். என்னால் படிக்க முடியவில்லை. நான் சொல்வதை கேட்பதில்லை என என கூறியுள்ளார். உடனே போலீசார் தனது பெற்றோர் இனி தகராறு செய்ய மாட்டார்கள் அப்படி தகராறு செய்தால் போலீஸிற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இந்த தகவல் அறிந்து மாணவியின் பெற்றோரும் வந்து தகராறு செய்ய மாட்டோம் உன்னை திட்டமாட்டோம் என்றனர். ஆனால் முதலில் மாணவி முதலில் இறங்க மறுத்தார். இதை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியை பத்திரமாக இறக்குவதற்கான நடவடிக்கையில் இறங்கினர். பின்னர் போலீசார் சமரசத்தை ஏற்று மாணவி கீழே இறங்கினார். அவருக்கு அறிவுரை கூறிய போலீசார் மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் இரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


