ஈரோடு நவ 3
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோவி லில் கந்த சஷ்டி விழா ஒவ்வொரு ஆண்டும் 6 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது.
இதற்காக நேற்று காலை 6.30 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து வள்ளி-தெய்வானை சமேத சுப் பிரமணியசாமியை படிக்கட்டுகள் வழி யாக மலைக்கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு காலை 9 மணிக்கு யாக பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி மகா பூர்ணாகுதி, உற்சவர் மற்றும் மூலவ ருக்கு 16வகையான அபிஷேகங்கள் செய் யப்பட்டன.
மேலும் மதியம் 12 மணிக்கு மகா தீபா ராதனை காட்டப்பட்டு, வள்ளி – தெய் வானைக்கு அபிஷேகம் செய்யப்பட் டது. பின்னர் விநாயகர், மூலவர் மற்றும் உற்சவருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் வரிசையில் நின்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற கைகளில் காப்பு கட்டி 6 நாட்கள் விர தத்தை தொடங்கினர்.
தொடர்ந்து வருகிற 7-ந் தேதி வரை
மலைக்கோவிலில் 6 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 7-ந் தேதி அன்று மாலையில் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் படிக்கட்டுகள் வழி யாக அடிவாரத்துக்கு அழைத்து வரப்ப டுகின்றனர். முக்கிய நிகழ்வான சூரசம் ஹாரம் அன்று இரவு 7 மணிக்கு நடை பெறுகிறது. அப்போது சென்னிமலையில் உள்ள 4 ராஜ வீதிகளில் முருகப்பெருமான் சூரர்களை வதம் செய்கிறார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள் கின்றனர்.
இது போல ஈரோடு திண்டல் வேலாயுத சாமி கோவிலிலும் கந்தசஷ்டி விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி யது. இதையொட்டி முருக னுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் னர் வள்ளி-தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாகபூஜை நடந்தது.
இதில் ஏராளமான பக் தர்கள் வந்தனர். அவர்கள் மலை படிக்கட்டு வழியாக ஏறி கோவிலுக்கு சென்ற
னர். அங்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த முருக பெருமானை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் தங்கள் கையில் காப்பு கயிறு கட்டி கந்த சஷ்டி விரதத்தை தொடங்கி னர்.
தொடர்ந்து நேற்று காலை யாகபூஜை, சடாஷர ஹோமம் நடந்தது இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. வருகிற பக்து 7-ந்தேதி காலை 10 மணிக்கு
பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள். பின்னர் பக்தர் கள் கொண்டு வந்த பாலில் முருகனுக்கு சிறப்பு அபிஷே கம் நடத்தப்பட்டு அலங்கா ரம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு சூரனை முருகன் வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி நடக்கிறது.
8 ந்தேதி காலை 9 மணிக்கு வேலாயுதசாமிக்கும், வள்ளி- தெய்வானைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறு கிறது. இதில் கலந்துகொள் ளும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படும். மேலும் அன்று பக்தர்கள் தங்களது விரதத்தை முடித்துக்கொள் வார்கள். மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது.