தேனி மாவட்டம், அக்டோ – 15 தேனி மாவட்டம்,
கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலை பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் கூடலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முருகன் டாக்டர் இஜாஸ் அகமது பல் மருத்துவர் கனநாதர் ஆகியோர் அடங்கிய குழு மாணவர்களின் வாய் மற்றும் பல்வரிசைகளை ஆராய்ந்து அவர்கள் புகையிலை பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளார்களா அல்லது வேறு நோய் தொற்று உள்ளதா என்பதை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்து உள்ளார்கள்
மாணவர்களிடையே இருக்கும் புகையிலை பழக்கத்தை தமிழ்நாட்டில் முற்றிலுமாக வேரறுக்க உறுதி ஏற்றனர் இம் முகாமிற்கு
தலைமை ஆசிரியர்
திரு கென்னடி மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்
ஜி பாண்டி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்