கோவை ஜூலை: 23
பொள்ளாச்சி சதுரங்க சங்கம் மற்றும் சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் எழில் பல் மருத்துவமனை இணைந்து நடத்திய கர்மவீரர் காமராசர் 122 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, மாறுவேட போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, கட்டுரை போட்டிகள் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. மாநில அளவில் நடைபெற்ற இவ்விழாவில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 426 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு மருத்துவர்.ஆர். சங்கவி,
மருத்துவர்.ஆர்.அபிநந்திதா,மருத்துவர்.வி. இந்துமதி மற்றும்
பொள்ளாச்சி தாலுகா சதுரங்க சங்கம் செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும் இந்நிகழ்விற்கு பொறியாளர் கருணாநிதி தலைவர் பொள்ளாச்சி சதுரங்க சங்கம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் மேலும் சிறப்பு அழைப்பாளராக M.ரமேஷ்குமார் பள்ளி தாளாளர் சங்கவி வித்யா மந்திர் பள்ளி. போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு தேர்ந்தெடுத்து 60 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் கலந்து கொண்ட 426 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கப்பட்டது. வாழ்த்துரை மற்றும் பரிசுகளை எம்.ரமேஷ் பாபு அவர்கள் பள்ளித்தாளாளர் மற்றும் ஆர்.முத்துக்குமார், முன்னாள் முதல்வர், NGM கல்லூரி, Nk.பகவதி தலைவர் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி, KM.சண்முகம் தலைவர் பொள்ளாச்சி கம்பன் கலை மன்றம், T.பாலமுருகன் பொள்ளாச்சி 20வது வார்டு நகர மன்ற உறுப்பினர், N.மகாலிங்கம் நகரச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். மேலும் காமராஜர், கக்கன் பற்றி பொள்ளாச்சிக்கு அவர் காலத்தில் செய்த பணிகளை PAP, ஆழியார், அமராவதி, அணைகளைப் பற்றி இன்றைய பள்ளி மாணவ மாணவிகளுக்கு மத்தியில் எழுச்சி உரையாற்றினார்கள். இறுதியாக R.ஜெயக்குமார் அவர்கள் பொள்ளாச்சி சதுரங்க சங்கம் நன்றி உரையாற்றினார்.