நாகர்கோவில், ஜூலை – 11,
கன்னியாகுமரி மாவட்டத்தில் துணிச்சல் மற்றும் தைரியமாக செயல்பட்ட தமிழநாட்டை பிறப்பிடமாக கொண்ட பெண்ணிற்கு சுதந்திரதினவிழா அன்று தமிழக முதலமைச்சர் கல்பனா சாவ்லா விருது பெற 15.07.2024 க்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர். தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு நாசாவில் முதல் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் நினைவாக அவரது துணிச்சல் மற்றும் துணிச்சலான முயற்சியை பாராட்டும் வகையில் இவ்விருது ஆண்டுதோறும் துணிச்சலான முயற்சியை வெளிப்படுத்தும் பெண்ணிற்கு வழங்கப்பட்டு வருகிறது.
கல்பனா சாவ்லா விருது பொதுத்துறையிலிருந்து சமூகநலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் சுகந்திர தினவிழாவின் போது தமிழக முதலமைச்சரால் தைரியம் மற்றும் துணிச்சலான முயற்சியை வெளிப்படுத்தும் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணிற்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்பனா சாவ்லா விருது 2024 ஆம் விருது தங்க முலம் பூசப்பட்ட வெள்ளி பதக்கம் மற்றும் ரூபாய்.5இலட்சம் ரெக்கபரிசாக வழங்கப்படும்.
இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் https://awards.tn.gov.in விண்ணப்பித்து அதன் நகலினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம், தரைதளத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண்.04652-278404. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொள்கிறார்.