மதுரையில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் சிறப்பு புத்தக கண்காட்சி ஜூன் 1-ம் தேதி தொடங்கி ஜூன் 7-ம் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 74 வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி மதுரை மேற்கு கோபுர தெருவில் உள்ள அந்த நிறுவனத்தின் புத்தக விற்பனை நிலையத்தில் இந்த சிறப்பு புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இந்த சிறப்பு புத்தக கண்காட்சியில் 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது என நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



