சென்னை, ஜூன்- 25:,
சென்னை அண்ணாநகரில் ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி புதிய ஷோரூம் திறப்பு விழா நடை பெற்றது.
.ஜோயாலூகாஸ் குமுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குருகுமான ஜோயாலுக்காஸ் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழா நிகழ்ச்சியில்
சிறப்பு அழைப்பாளர்களாக அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன். திரைப்பட நடிகர் பிரசாந்த் திரைபட நடிகரும் இயக்குநருமான தியாகராஜன், பின்னணி பாடகி சுஜாதா மோகன்,தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷிணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
இக்குழுமத்தின்
நிர்வாக இயக்குநரும் தலைவருமான ஜோயாலுகாஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
அண்ணாநகர் ஜோயாலுக்காஸ் துவக்க விழா சலுகையாக தங்கம், வைரம், வெள்ளி நகைகள் ஆகியவற்றுக்கு செய்கூலி மற்றும் சேதாரத்தில் 50% தள்ளுபடி அளிக்கிறது, இச்சலுகை ஜூலை 14, 2024 வரை கிடைக்கிறது.
மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் ஒரு மில்லியன் டிசைன்களை கொண்ட ஜுவல்லரி சாம்ராஜ்யமாக ஜோயாலுக்காஸ் விளங்குகிறது. மேலும் இந்த ஷோரூம் தலைசிறந்த வசதிகளுடன் வேறெங்கும் கிடைக்காத ஜுவல்லரி ஷாப்பிங் அனுபவத்தை உறுதி செய்கிறது என்றார்.