மார்த்தாண்டம் பிப். 16-
பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழகம் முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜாண்கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிரான்சிஸ் சேவியர் கோரிக்கை விளக்க உரையாற்றினார்
ஆசிரியர் கூட்டணியை சார்ந்த சசிகுமார், பிரைட் சிங்,பிரதீஷ் குமார், சிபு, பென்சாம்,பாசி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்
ஜியோ ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். சுமார் 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.