ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் காலா வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி, ஜாக்டோ ஜியோ அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் ஞானசேகரன், ராஜேந்திரன், நந்தகுமார், ஏழுமலை, சுபாஸ்,பழனி, தர்மன், அழகு தமிழ், சுரேஷ், அறிவழகன்,ராஜேந்திரன் உள்பட நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎஸ் ரத்து செய்ய வேண்டும். ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.