திருப்பூர் பிப்:23
தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சரும் மாநில அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தலின்
படி அனைத்து பகுதிகளிலும் தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக திருப்பூர் வடக்கு தொகுதி சார்பில்
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன் தலைமையில் முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் கொங்கு மெயின் ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி தெருமுனை பிரச்சாரம் மேற்கொண்டான்.
பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, திமுக ஆட்சியின் அவல நிலைகளை எடுத்துரைகத்தும், அதிமுகவின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் உட்பட பகுதி செயலாளர், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.V.ஜெயராமன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் வாடிக்கையாகவிட்டது, கணவன் கண் முன்னே மனைவி பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறாள், பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள் என்றும், தமிழகத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதாகவும், மேலும் பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தற்போது வரை குற்றவாளிகள் கண்டுபிடிக்காமல் அப்பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களை குற்றத்தை ஒப்புக்கொண்டு என்று காவல்துறையினர் மிரட்டுவது வேதனை கலந்த வேடிக்கையாக உள்ளது என்றும், இந்த திராவிட மாடல் ஆட்சியில் காவல்துறை பெண்களை பாதுகாக்குமா? என்பது சந்தேகம், பெண்கள் குழந்தைகள் எல்லாம் அப்பா காப்பாற்றுங்கள் என்று கதறுகிறார்கள் அதை ஸ்டாலின் என்னை அப்பா என்று அழைப்பதாக கூறுவது 21-ஆம் ஆண்டின் பெரும் நகைச்சுவையாகும், மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா மக்களுக்காக வாழ்ந்தவர் பல்வேறு திட்டங்களை தந்தவர் அதனால் தான் டெல்லியில் இருப்பவர்கள் கூட அவரை அம்மா என்று அழைத்தார்கள். என்றும், தமிழகத்தில் பாதுகாப்பை பலத்த படுத்திட வேண்டும் என்றும், விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, பயிர் வகைகள் உயர்வு போன்றவற்றால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழில்துறையினர் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் வரும் தேர்தலில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் மீண்டும் முதல்வர் ஆனால் தான் தமிழக மக்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாகும் என்று பேசினார்.