சென்னை, நவ 19
சென்னை வடபழனி ஐ.டி.கே. எஜுகேஷன் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், இந்திய மாணவர்களுக்கு மலேசியாவில் சர்வதேச தரத்தில் உயர் கல்வி வழங்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை ஐ.டி.கே. எஜூக்கேஷன் சர்வீஸஸ் நிறுவன தலைவர் டாக்டர் ஜோசப் மாணிக்கராஜ் மற்றும்
ஸ்டெடி மலேசியா நிறுவன தலைவர் ஜி.எஸ். ஆகியோர் மலேசியாவில் சர்வதேச கல்வித் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர். ஸ்டெடி மலேசியாவின் இந்திய நிறுவன செயல் அதிகாரி ஸ்ரீகாந்த் ஜெய்பால் உடனிருந்தார்.
இந்த விழாவில்
சிறப்பு விருந்தினராக மூத்த கல்வியாளரும் விநாயகா மிஷன் பல்கலைக்கழக ரிசர்ச் பவுண்டேசன் டீன் டாக்டர் ஆர். மார்த்தா கிரிஸில்டா பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஐ.டி.கே. எஜுகேஷன் சர்வீஸஸ் தலைவர் டாக்டர் ஜோசப் மாணிக்கராஜ் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையினை மையப்படுத்தும் வகையில் தனது நிறுவனம் சார்பில் ஐ.டி.கே. குளோபல் ஸ்டடி டிவிசன் துவங்கப்பட்டு தமிழக மாணவர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மாணவர்களும் மலேஷியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சர்வதேச தரத்தில் உயர் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டெடி மலேசியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும்
இதன் மூலம் மலேசிய உயர் கல்வி அமைச்சகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறை ஒப்புதலோடு நாங்கள் இந்திய மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் உயர்கல்வியை குறுகிய மற்றும் நீண்டகால கல்வி, பிரபல தொழிற்சாலைகளில் தொழிற்பயிற்சி மற்றும் விசா ஏற்பாடுகள் என மாணவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்போம் என்றும்
மேலும் ஐ.டி.கே. எஜூகேஷன் சர்வீஸஸ் நிறுவனம்
தமிழக மாணவர்கள் ஐ.டி. துறையிலும் டிஜிட்டல் துறையிலும் ஆளுமைமிக்கவர்களாக உருவாக்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்ஸ் மொபைல் அப்’ஸ் என பல்வேறு டிஜிட்டல் திறன் உயர் கல்விகளை வழங்கி வருகிறது.
எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து
டாக்டர் ஜோசப் மாணிக்கராஜ்
கூறுகையில்
சென்னை, வடபழனி தோஷி கார்டனில் இயங்கிவரும் ஐ.டி.கே. எஜுகேஷன் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில்
டிஜிட்டல் கல்வி பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றுவதுடன், தொழில்முனைவோராகவும் திகழ்கின்றனர்.
அதேபோல்
ஐ.டி.கே. எஜுகேஷன் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது பயணத்தின் மீண்டும் ஒரு மைல் கல்லாக தமிழக மற்றும் இந்திய மாணவர்களுக்கு சர்வதேச தரக் கல்வியை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
என்று கூறினார்.
நிகழ்ச்சி
ஏற்பாடுகளை ஐ.டி.கே. எஜுகேஷன் சர்வீஸஸ் நிறுவன அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.