திண்டுக்கல் ஜுன் :23
திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட், நேரு யுவ கேந்திரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் பாரதிய சுவாமி விவேகானந்தா யோகா விளையாட்டு சங்கம் இணைந்து சர்வதேச யோகா தினம் 2024 தினத்தை முன்னிட்டு யோகாசனம் நன்மைகள் பற்றியும், யோகா ஆசனத்தை பற்றியும் மற்றும் யோகா செய்முறை பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது பள்ளியின் மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருப்பதி அனைவரையும் வரவேற்றார். பிரேமலதா தலைமை உரையாற்றினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டாக்டர்.சத்யநாராயணன், நேரு யுவ கேந்திரா இளையோர் அலுவலர் சரண் வி கோபால் மற்றும் பாரதிய சுவாமி விவேகானந்தா யோகா விளையாட்டுச் சங்கம் தலைவரும், மற்றும் பயிற்சியாளருமான தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். யோகா தினத்தை முன்னிட்டு பள்ளியின் அனைத்து மாணவிகளுக்கும் யோகா பயிற்சியானது பாரதிய சுவாமி விவேகானந்தா யோகா விளையாட்டு சங்கம் மூலமாக வழங்கப்பட்டது. சர்வதேச யோகா தினத்தில் அரசு பள்ளியின் மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டு பயணடைந்தார்கள். சில்ரன் சாரிடபிள் ட்ரஸ்ட் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேச்சியப்பன் மற்றும் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகளுக்கு யோகா மேட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் ஆசிரியர் ஜெயச்சந்திரன் நன்றி
கூறினார்.