திருச்சி, ஏப்ரல் 15, திருச்சியில் மருத்துவ டயக்னோஸ்டிக்ஸ் துறையில் முன்னோடியாக திகழும் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், மேக்னம் இமேஜிங் & டயக்னாஸ்டிக்ஸுடன் கூட்டாக, அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நோயறிதல் மற்றும் இமேஜிங் மையமான நியூபெர்க் மேக்னத்தை தொடங்கியது.
இந்த முயற்சி, திருச்சி மக்களுக்கு விரிவான, நவீன மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார சேவைகளை வழங்கும்
நியூபெர்க் மேக்னம் விழாவிற்கு திருச்சி மாநகராட்சி மேயர்
மு.அன்பழகன் தலைமையாற்றினார்.
இந்த கிளைகள் கே.கே.நகர், புதுக்கோட்டை, டிவிஎஸ் டோல் கேட், பேரம்பலூர், அரியலூர், துறையூர், திருவண்ணாமலை, ராமலிங்கம் நகர், தில்லைநகர், மணப்பாறை மற்றும் ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்பட்டு மக்கள் மிக எளிதாக தரமான டயக்னாஸ்டிக் சேவைகளைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில், திருச்சி காவல் வட்டாரக் கண்காணிப்பு அதிகாரி டாக்டர் வி. வருண்குமார், ஐ.பி.எஸ், மற்றும் மருத்துவ இயக்குநர் (ஜாயிண்ட் டைரக்டர்) டாக்டர் ஜி.எஸ். கோபிநாத், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவிற்கு பெருமை சேர்த்தனர்.
மேலும், நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு, மற்றும் நியூபெர்க் மேக்னத்தின் நிறுவனர் மற்றும் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ரேடியாலஜி துறைத் தலைவர் டாக்டர் பவாஹரன் ராஜலிங்கம் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.