பூதப்பாண்டி, ஏப்ரல் 29
பூதப்பாண்டியை அடுத்துள்ள எட்டாமடை மேல பிளவு கல்விளை பகுதியை சேர்ந்தவர் யோபு (37) இவர் நேற்று முன்தினம் மாலை சுமார் 4.00 மணியளவில் தனது பைக்கில் மனைவி முருகேஷ்வரி (33) குழந்தைகள் சக்தி (8) மற்றும் வேலு (6) ஆகியோரை அழைத்து கொண்டு த டிக்காரன் கோணத்திலிருந்து கேசவன் புதூர் செல்லும் சாலையில் ஊச்சிகுளம் பகுதியில் வரும் போது தடிக்காரன் கோணம் குட்டி பொத்தை பகுதியை சேர்ந்த விமல் (31) என்பவர் ஓட்டி வந்த பைக் அதிவேகமாக வந்து இவரது பைக் மீது மோதியதில் இவரது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தது இதில் இவரது மனைவி குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்
இது குறித்து யோபு பூதப்பாண்டி காவல் நிலையத்தில் ெகாடுத்த புகாரின் பேரில் போலீசார் விமல் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்