காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அறிஞர் அண்ணா அரங்கம் அருகில் ஹர்ஷிதா பிசியோ மற்றும் வெல்னஸ் கிளினிக் மற்றும் உமன்ஸ் பிட்னஸ் சென்டர் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்,
இந்நிகழ்ச்சியில், குன்றத்தூர் நகர் மன்றத் தலைவர் கோ.சத்தியமூர்த்தி உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவிற்க்கு வருகை புரிந்த அனைவரையும் ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் டாக்டர் எம்.மணிமாலா மோகன் அன்புடன் வரவேற்பு செய்தார்,