டிச.24
திண்டுக்கல்லை அடுத்த ஆர்.எம்.டி.சி காலனி அருகே உள்ள திரு இருதய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கலையரங்கம் திறப்பு விழா மற்றும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது.
கல்லூரியில் அமைக்கப்பட்ட புதிய கலையரங்கத்தை பிரசிடெண்ட் மற்றும் சுப்பீரியர் ஜென்ரல் திரு இருதய சகோதரர்கள் சபை விக்டர்தாஸ் திறந்து வைத்தார்.விஞ்ஞானி பிரான்சிஸ் சேவியர் திட்ட இயக்குனர் டி.ஏ.சி.ஏ புதிய கலையரங்கத்தை ஆசீர்வதித்தார்.முன்னதாக ஆங்கிலத் துறை தலைவர் ஜெனிடா வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியை வணிக நிர்வாகத்துறை முதலாம் ஆண்டு மாணவர் ஜெய் சூர்யா மற்றும் தமிழ் துறை இரண்டாம் ஆண்டு மாணவி முத்து வீரலட்சுமி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
திருஇருதய சகோதரர்கள் சபையின் அருட்சகோதரர்கள் டென்னிஸ் மைக்கேல், ஆல்பர்ட் சேவியர், ஞானப்பிரகாசம், அருள்ராஜ், ஆரோக்கியராஜ்,சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் சலேத் ராஜா, தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன்,பிரம்ம குமாரி ராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் இன்னாசிமுத்து விருந்தினர்களை வரவேற்று கவுரவித்தார். வளாக ஆலோசகர் லூர்துராஜ், விடுதி இயக்குனர் ஆரோக்கியசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவாக அறிவியல் புலத்தலைவர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.