காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன். தைப்பூச பூஜை தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் முருகப்பெருமானை தரிசனம் செய்து வரும் மக்களுக்கு லட்டு பிரசாதங்களை வழங்கினார்.
திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வரிசையில் நின்றவர்களுடன் முன்னாள் எம்எல்ஏ கே பழனி தரிசனம் செய்தார்.
சிலர் காவடி எடுத்தும்,வேல் அலகு ,குத்தியும் நடந்து சென்று வேண்டுதல்களை நிறைவேற்றினர். குன்றத்தூர் நகர் மன்ற உறுப்பினர் என்.ராஜா குடும்பம் சார்பாக 1500 பேருக்கு அறுசுவை உணவை வழங்கினார். அதிமுக 26 வது வார்டு உறுப்பினர் முருகவேல், உதயகுமார் அனைவருக்கும் குளிர்பானம் வழங்கி மகிழ்வித்தார்.