நாகர்கோவில் ஆக 4
குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில்
அய்யாவழி அறக்கட்டளை தலைமைச் செயல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக அவை தலைவர் கிரகாம்பெல் தலைமைவகித்தார். அய்யா வழி அறக்கட்டளை நிறுவனர் பால பிரஜாபதி அடிகளார் முன்னிலை வகித்தார்.திருநெல்வேலி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்
ராபர்ட் புரூஸ் அலுவலகத்தை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி
முருகேசன்,கருங்கல் ஜார்ஜ், ஜஸ்டஸ் அமிர்தஐயா, அகமது உசைன்,குரு பையன் ராஜா,கவிஞர்.மயூரி சீத்தாராமன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, செல்ல வடிவு உட்பட பலர் வாழ்த்தி பேசினார்.
முன்னதாக அன்பு வனம் நிர்வாகி பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி வரவேற்று பேசினார், முடிவில் விஜயராகவன் நன்றியுரை கூறினார். விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.



