காம்ரேட்ஸ் லா ஃப்ர்ம் சட்ட ஆலோசனை மைய அலுவலகம் சென்னை அரும்பாக்கம் மெட்ரோ இயில் நிலையம் எதிரில் திறப்பு விழா நடைபெற்றது.
வழக்கறிஞர்கள் மு .நம்பிராஜன்கே .எம் . ராமராவ் , ஆர் .முத்துக்குமார், ஆர்.நித்தியா ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து செயல்படும் இந்த அலுவலகத்தை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் , மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனா
கிருஷ்ணன் ஆகியோர் குத்துவிக்கேற்றி துவக்கி வைத்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தி.நகர் பி.சத்யா , விருகை வி.என் ரவி , தென்சென்னை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அறிவழகன், ராஜேஷ் மற்றும் எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் துரைக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .