தஞ்சாவூர்.மே 17
தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் மரக்கன்றுகளை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தஞ்சாவூர் மாநகரில் அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதியாக தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள மேம்பாலம் கண்டறியப் பட்டுள்ளது. இதனால் மேம்பால த்தில் 30 கிலோமீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும் என பதாகை வைக்கப்பட்டுள்ளது ஆனால் பெரும்பாலானோர் மேம்பாலத்தில் வேகமாக தான் செல்கின்றனர்.
தஞ்சாவூர் மாநகரில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தஞ்சாவூர் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போக்கு வரத்து போலீசார் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நிறுத்தி சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்
இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது தலைக்கவசம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும், சாலையை கடக்கும் பொழுதும் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என போக்கு வரத்து போலீசார் தெரிவித்தனர் அதனை தொடர்ந்து பொதும க்களுக்கு மரக்கன்றுகள் கொடுக்க ப்பட்டு மரத்தின் பயன்களையும் நமது உயிரின் பயன்களையும் மிக தெள்ளத் தெளிவாக விளக்கினர் இதையடுத்து சாலை விதிகளை மதிப்போம் உயிர் சேதங்களை தவிர்ப்போம் என உறுதி மொழியும் ஏற்கப்பட்டது .
தஞ்சாவூர் மாநகரில் சாலை விதிகள் மீறுபவர்களுக்கு விதிக்க ப்படும் புதிய அபராத தொகை பட்டியலையும் போலீசார் வெளி யிட்டனர்.