குத்தாலத்தில்,இலவச இருதயம் மற்றும் பொது மருத்துவம் மருத்துவ முகாமை பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன் மற்றும் சம்சுதின் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மகளீர் மேல்நிலை பள்ளியில் லயன்ஸ் க்ளப் மற்றும் காமாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமிற்கு லயன்ஸ் க்ளப் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். முகாமை குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன் மற்றும் துணை தலைவர் சம்சுதின் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் இருதயம் மற்றும் பொது மருத்துவம், சக்கரை நோய், ECG, ஆகியவை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது. இந்த முகாமில் சுமார் 500 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இதில் குத்தாலம் லைன் சங்கம் செயலாளர் கவாஸ்கர் மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் சிக்கந்தர் ஹயாத்கான் , வட்டாரத் தலைவர் பார்த்திபன், மாவட்ட இன செயலாளர் சின்னதுரை, முன்னாள் மண்டல தலைவர் ராஜ்குமார் , லென்ஸ் கிளப் பொருளாளர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .