தருமபுரி ஆட்சியர் கூடுதல் கூட்டறங்கில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 43 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள், குடும்ப அட்டைகள் மற்றும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சதீஷ் வழங்கி அவர் கூறியதாவது. திருநங்கைகள் நல வாரியத்தின் சார்பில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள், குடும்ப அட்டைகள், சுயதொழில் மானியம், கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், இலவச வீட்டு மனை பட்டாக்கள், இலவச வீடுகள், இலவச பஸ் வசதி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உயர்கல்வி படிக்கும் திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோருக்கு கல்வி மற்றும் இதர கட்டணங்கள் வழங்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 165 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 27 திருநங்கைகள்ரூ. 1,500 ஓய்வூதியம் பெற்ற வருகிறார்கள். மேலும் சுய தொழில் மானியம் திட்டத்தில் 4 திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டு இதில் இரண்டு பேர் ஆட்டோ ஓட்டுனராகவும், 2 பேர் துணிக்கடையும் நடத்தி வருகின்றனர். தற்போது 43 திருநங்கைகளுக்கு அரசு நடத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு குறைதீர் முகாமில் திருநங்கைகள் பங்கேற்று, அரசால் வழங்கப்படும். பல்வேறு அரசு நடத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும். என்று ஆட்சியர் கூறினார். இம்மு முகாமில் சமூக நலத்துறை அலுவலர் பவித்ரா, டிஎஸ்பி சிவராமன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.



