சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து திண்டுக்கல் மாவட்டம், நொச்சியொடைப்பட்டியில் உள்ள அனுகிரஹா கல்லூரியில் மனித உரிமைகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருப்பதி வரவேற்புரை வழங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான டாக்டர்.திரிவேணி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார். மேலும் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர்.மரிய ஜோசப் லூயிஸ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் கல்லூரியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரியின் பேராசிரியர் கண்மணி அனைவருக்கும் நன்றி கூறி இனிதே நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.