திண்டுக்கல் பிரண்ட்ஸ் லயன்ஸ் சங்கம் நிலக்கோட்டை மலர் நகர் சங்கம் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்.
திண்டுக்கல் நம்ம பிரியா’ஸ் பட்டு ஜவுளி மற்றும் ரெடிமேட்ஸ், திண்டுக்கல் பிரண்ட்ஸ் லயன்ஸ் சங்கம் நிலக்கோட்டை மலர் நகர் லயன்ஸ் சங்கம் மதுரை வேலம்மாள் கண் மருத்துவமனை திண்டுக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நிகழ்ச்சி தோட்டனூத்து RMTC நகரில் உள்ள GRK கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரியில் நடைபெற்றது. இம்முகாமை சமூக நல்லிணக்க ஆர்வலர் நாட்டாண்மை Dr.Ln.N.M.B. காஜாமைதீன் துவக்கி வைத்தார். தோட்டனூத்து ஊராட்சி தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட அமைச்சரவை செயலாளர் Ln.Dr. K.C.மோகன்காந்தி, முன்னாள் வட்டார தலைவர் A.முருகானந்தம், மதர் தெரசா நர்சிங் கல்லூரியின் தாளாளர் Ln. Dr.S.லலிதா, உதயம் லயன்ஸ் சங்க பட்டைய தலைவர் லயன். நல் நாகராஜன், பழனி நெய்க்காரப்பட்டி லயன்ஸ் சங்க பட்டைய தலைவர் லயன். சுப்புராஜ்
மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் . இம்முகாமை மதுரை வேலம்மாள் கண் சிகிச்சை மருத்துவமனை மருத்துவர்கள் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்தனர். இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் கண் சிகிச்சைக்காக கலந்து கொண்டனர். இதில் மேல் சிகிச்சைக்காக 20 பேர் சென்றுள்ளனர். இந்நிகழ்வை பெருமாள் ஏற்பாடு செய்தார். பிரண்ட்ஸ் லைன்ஸ் சங்கத்தின் பட்டய தலைவரும், மதர் தெரசா மண்டல மாநாட்டின் செயலாளருமான
Ln.R.ஜெயபிரகாஷ் நாராயணன், உதயம் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவரும், GRK கல்வி நிறுவனத்தின் தாளாளருமான Ln. G.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.



