பெருமாநல்லூர், மே. 10-ஊரக வளர்ச்சி மற்றும் 5 ஊராட்சித் துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் – மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்ட பணிகளுக்கு ஆணைகள் வழங்கும் விழா பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. விழாவில் அவினாசி, திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன் றியத்திற்குட்பட்ட 157பயனா ளிகளுக்கு ரூ.4.57 கோடி மதிப்பீட்டில்
குடிசை இல்லா மாநிலம் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்ப ணிகளுக்கான ஆணைகளை தமிழ்வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அமைச்சர்
மு. பெ.சாமிநாதன் வழங்கினார், மேலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக கணக்கம்பாளையம் காளிபாளை யம், பெருமாநல்லூர், தொரவலூர் ஊராட்சிகளுக்கு நமக்கு நாமே திட்டத்தில்
புதிதாக சாலை அமைத்தல் மற்றும் சாலை மேம்படுத்துதல் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
மேலும் கணக்கம்பாளை யம் அரசு பள்ளி செல்லும் வழியில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச் சியில் தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மேயர் என்.தினேஷ்குமார், வடக்கு மாநகர பொறுப்பாளர் ஈ.தங்கராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், சாமலாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகம் பழனிச்சாமி,
வடக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராமமூர்த்தி மற்றும்
நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டனர்.