ஒசூர், நவம்பர் 14 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாராயண இ-டெக்னோ பள்ளி மாணவர்கள் படைப்பாற்றல் சாதனை நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வானது நாராயணா இ-டெக்னோ பள்ளி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் கிளப் சாதனைகளை வெளிப்படுத்தும் கிளப் கல்மினேஷன் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாடியது. இதில் மாணவர்கள் புதுமையான அடிப்படையிலான திட்டங்களால் அனைவரையும் கவர்ந்தனர். மாணவர்கள் கலர் வீல் மற்றும் வடிவமைப்புகள் மூலம் உருவாக்கிய கலைப்பணிகள் மிகுந்த பாராட்டைப் பெற்றன. மேலும் மாணவர்கள் நிதி கல்வி, முதலீடு, சேமிப்பு போன்ற வாழ்வுத் திறன்களை விளக்கும் பிரசந்திப்புகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியை உதவி பொது மேலாளர் நரேந்திர குமார், மற்றும் பள்ளி முதல்வர் செல்வி சுதா ப்ரவீண் குமார் தலைமையேற்று நடத்தினர். ஹெச்டி எப்சி கிளை மேலாளர். சம்பத் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிளை மேலாளர். ராஜேஷ் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.



